(UTV | கொழும்பு) – காணாமல் போனோர் தொடர்பான அலுவலக தலைவர் நிலையில் இருந்து சாலிய பீரிஸ் விலகியுள்ளார்.
சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காகவே தாம் பதவி விலகியுள்ளதாக சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பதவி விலகல் செப்டெம்பர் 30இல் இருந்து நடைமுறைக்கு வருகின்ற நிலையில் பதவி விலகலுக்கான கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு முதலாவது தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டார்.
இந்த அலுவலகத்தின் ஏனைய உறுப்பினர்களாக ஜெயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹன்டி அன்டோன்நெத்தி பீரிஸ், நிமல்கா பெர்ணான்டோ, மிரக் ரஹீம், சோமசிறி லியனகே மற்றும் கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.