உள்நாடு

அ.இ.ம காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் நௌஷாட் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட், அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கட்சி சார்ந்து அவர் வகித்த பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கட்சியின் நலன்களுக்கு எதிராகவும், நெறிமுறைகளை மீறி செயற்பட்டமையினாலுமே அவர் இவ்வாறு கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த கட்சியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கையில், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட்டின் பேச்சுக்களும் செயற்பாடுகளும் கட்சிக்குப் பாதகமாக அமைந்ததனாலேயே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு, கட்சி யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே, அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியீடு

கொரோனா கொத்தணிகளின் அதிகரிப்பு : ஊரடங்கு தொடர்பிலான முக்கிய அறிவித்தல்

போதைப் பொருள் – பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனை