உள்நாடு

அங்கொட லொக்காவின் மற்றுமொரு சகா பலி

(UTV | கொழும்பு) – உயிரிழந்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலகின் குழுத் தலைவன் அங்கொட லொக்காவுடைய குழுவின் மற்றுமொரு சகாவான´சமியா´ என்ற சமிந்த எதிரிசூரிய பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிச்சூடு கம்பஹா பகுதியில் வைத்து குறித்த நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர், ´சொல்டா´ என்ற அசித ஹேமதிலக என்ற அங்கொட லொக்காவுடைய குழுவின் பிரதான சகா பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை எகிறுகிறது

கடந்த வருடத்தை விட இந்த வருடம் ரயில் விபத்துக்கள் அதிகரிப்பு

எரிபொருள் விலையேற்றத்தினால் திண்டாடும் முச்சக்கரவண்டி சாரதிகள்