(UTV | கொழும்பு) – எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் விமான நிலையம் திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.