விளையாட்டு

ரோஹிட் சர்மாவுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது

(UTV|இந்தியா) – இந்திய மத்திய அரசினால் ராஜீவ் காந்தி கேல் (khel) ரத்னா விருது இந்திய கிரிக்கட் வீரர் ரோஹிட் ஷர்மா உட்பட ஐந்து பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

விளையாட்டுத்துறையில் சாதித்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்நிலையில் இன்று விருதுக்கான பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கன ராணி ஆகியோருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்படவுள்ளது.

கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதல் ஒருநாள் போட்டியிலே இலங்கை வீழ்ந்தது

சர்வதேச நடுவர் வாழ்வுக்கு Bruce Oxenford முற்றுப்புள்ளி

தலைவராக லசித் மாலிங்க நியமனம்?