(UTV|கொழும்பு) – அரச வேலை வாய்ப்பு திட்டத்தில் தெரிவு செய்யப்படாத பட்டதாரிகள் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகங்களில் தமது மேன்முறையீடுகளை பதிவு செய்யலாம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் www.pubad.gov.lk என்ற இணையதளத்தில் மேன்முறையீடு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.