உள்நாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அரசமைப்புக் குழு

(UTV | கொழும்பு) – அரசமைப்பு தொடர்பான விடயங்களில் தமது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அரசமைப்புக் குழுவொன்றை அமைப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, மேற்படி யோசனையை முன்வைத்துள்ள நிலையில், அந்த யோசனையை அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க வழிமொழிந்துள்ளார்.

புதிய அரசமைப்பு மற்றும் 20 ஆவது திருத்தம் உட்பட அரசமைப்பு தொடர்பான எந்தவொரு விடயத்தையும் ஆய்வுசெய்வதற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டைக் குறிப்பிடுவதற்கும் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது.

Related posts

‘தங்கல்ல சுத்தா’ பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

போதைப் பொருள்களுடன் 455 பேர் கைது

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 182 பேர் வீடுகளுக்கு