உலகம்

தனது சகோதரிக்கு கூடுதல் பொறுப்புகளை பகிர்ந்தளித்த வடகொரிய ஜனாதிபதி

(UTV|வட கொரிய)- வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தனது சகோதரி கிம் யோ-ஜாங் உட்பட அவரது உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளதாக தென் கொரியாவின் உளவு அமைப்பு கூறுகிறது.

நாட்டின் “முழுமையான அதிகாரம்” கிம் தொடருவதாகவும், ஆனால் அவர் தனது மனஅழுத்தத்தை குறைப்பதற்காக கொள்கை ரீதியிலான மற்ற பொறுப்புகளை மற்றவர்களிடத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிம்மின் சகோதரியே இப்போது “ஒட்டுமொத்த அரசு விவகாரங்களை வழிநடத்துகிறார்” என்று தென் கொரியாவின் தேசியப் புலனாய்வு அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

“கிம் ஜாங்-உன் தனது முழுமையான அதிகாரத்தை இன்னும் பராமரித்து வருகிறார். ஆனால் அவை சிறிது, சிறிதாக மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன,” என்று அந்த அமைப்பு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!

ஜப்பானை தாக்கும் ஹாய்ஷென் – 8.1 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

அறிகுறிகள் இன்றி 137 கொரோனா நோயாளர்கள் அடையாளம்