கிசு கிசு

இருகினால் களி இளகினால் கூழ் – அரச ஊழியர்கள் ஆடையில் புதிய சட்டம்

(UTV | கொழும்பு) – அரச அலுவலகங்களில் பணியாற்றும் அரசாங்க ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பத்திக் அல்லது உள்நாட்டு ஆடையை அணிந்து வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகவியலாளர்கள் பாராளுமன்றத்தில் வைத்து வினவிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்திக், கைத்தரி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பத்திக் ஆடை அணிந்தே 9வது பாராளுமன்ற கன்னி அமர்வில் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு ஆடை தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமையும் அனைவரதும் அவதானத்தினை கவர்ந்துள்ளது.

Related posts

கொரோனாவும் ரணிலின் ஊடக அறிக்கையும்

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை-பிரதமர்

எதிர்வரும் 72 மணித்தியாலங்கள் தீர்மானமிக்கது