(UTV|கொழும்பு)- தற்காலத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை நவீனபடுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்காக எதிர்வரும் காலத்தில் புதிய அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டின் பிரதான பாடசாலைகள் சிலவற்றின் அதிபர்களுடன் நேற்று(20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயர்தர வகுப்புக்களில் பல்வேறு பாடங்களுக்கு பாடப்புத்தகம் இல்லாத காரணத்தினால் குறித்த பாடபுத்தகங்களை வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்