உள்நாடு

டிப்பர் வாகன விபத்து – மற்றொரு பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

(UTV|மாத்தறை )- மாத்தறை – ஹக்மனை பகுதியில் இடம்பெற்ற டிப்பர் வாகன விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பொலிஸ் அதிகாரி இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி மாத்தறை ஹக்மனை பகுதியில், டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன். மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த பொலிஸ் அதிகாரி மாத்தறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பொலிஸ் அதிகாரி இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை காயமடைந்த மற்றைய பொலிஸ் அதிகாரி குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

வீதி ஒழுங்கை சட்டம் நாளை முதல் அமுலுக்கு

இராஜகிரியவில் காருக்கு அருகில் மீட்கப்பட்ட சடலம்!

T20 உலகக் கிண்ணத்திற்காக சிங்கங்கள் நாட்டிலிருந்து வெளியேறினர்