(UTV | கொழும்பு) – மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அமைச்சரவை இன்று(19) அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே 50,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய அரசின் திட்டங்களில் ஒன்றான பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பட்டதாரிகள் சிலருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஒருங்கிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் நேற்றைய தினம் (18) எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.