(UTV|இந்தியா) – அண்மையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 14ம் திகதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்தார். ஆனால் இது தற்கொலை அல்ல, கொலையாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தி மீது, சுஷாந்த் சிங்கின் தந்தை பீகார் பொலிஸில் முறைப்பாடு அளித்தார். மேலும் ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் தன் மீது பீகார் பொலிஸார் பதிவு செய்துள்ள வழக்கு மற்றும் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா மனுத் தாக்கல் செய்தார்.
சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விவரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் மும்பை பொலிஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.