கிசு கிசு

பவி’யின் அனுமதியின்றி ‘ஸ்புட்னிக்-5’ இலங்கை வராதாம்

(UTV | கொழும்பு) – உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொவிட் 19 தொற்றுக்கு எதிராக ரஷ்யாவின் இராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ‘ஸ்புட்னிக்-5’எனும் தடுப்பூசியை இலங்கைக்கும் அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி பி. மெட்டேரி தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய தூதுவர்,

இலங்கையின் பயன்பாட்டிற்காக தடுப்பூசியை அறிமுகப்படுத்த விருப்பம் தெரிவித்ததோடு, தடுப்பூசி பெற ஆர்வமாக இருந்தால் ரஷ்யாவில் உள்ள குறித்த துறை சார்ந்த அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இலங்கை பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடமும் இது தொடர்பிலான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகை அச்சுறுத்தும் கொவிட் 19 என அறியப்பட்ட கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் என பல நாடுகளும் களமிறங்கியுள்ளன.

அந்த வகையில் ஏறத்தாழ 165 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி அதனை ரஷ்ய ஜனாதிபதியின் மகளுக்கு முதன் முறையாக செலுத்தி பரிசோதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடுப்பூசி, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டதாகவும் ஆற்றல் மிக்கது, பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதெல்லாம் சோதனைகளில் நிரூபணமாகி இருக்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்

தந்தை வழியில் மகன்

சிம்பு-ஹன்சிகா மீண்டும் இணைகிறார்களா?