கேளிக்கை

மற்றுமொரு சினிமா பிரபலம் உயிரிழப்பு

(UTV | இந்தியா) – கொரோனா இந்தியாவில் 23 லட்சத்திற்கும் அதிகமானோரை இவ்வருடம் பாதிக்கச் செய்துவிட்டது. 46 ஆயிரத்திற்கும் அதிகமானோரை உயிரிழக்கச் செய்துவிட்டது.

இன்னும் பாதிப்புகள் தொடர்ந்து வருகிறது. ஊரடங்கால் பெரும் பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. சினிமா, சீரியல் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

சினிமா பிரபலங்கள் சிலர் அண்மைகாலமாக உடல் நலக்குறைவால் காலமானார்கள். மேலும் சிலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் Nishikant Kamat ஹைதராபாத்தில் கல்லீரல் பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவந்தார்.

தற்போது அவர் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரையுலகம் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Drishyam, Madaari, Mumbai Meri Jaan ஆகிய படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.

Related posts

SPB உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

அடி பாதாளத்திற்கு சென்ற ஹன்சிகாவின் மஹா பட வசூல்

திருமணமா? பரவும் தகவல் பற்றி விஷாலின் அதிரடி பதில்