உலகம்

சவுதி அரேபியாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்

(UTV | சவுதி அரேபியா) – சவுதி அரேபியாவை நோக்கி நேற்று(16) வந்த ஏவுகணைகளை தாக்கி அழித்துவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சவுதியை நோக்கி நேற்று ஏவுகணைகள் வந்துள்ளது. ஏமனில் இருந்து ஹவுதி படைகள் ஏவிய ஏவுகணைகள் சவுதியை நோக்கி வந்துள்ளது. தெற்கு சவுதியில் இருக்கும் நகரங்களை நோக்கி இந்த ஏவுகணைகள் வந்துள்ளது. அங்கு இருக்கும் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வேகமாக சீறி வந்த ஏவுகணைகளை சவுதி தடுத்து அழித்தது. ஏவுகணை தடுப்பு சிஸ்டம் மூலம் அனைத்து ஹவுதி ஏவுகணைகளும் தடுத்து அழிக்கப்பட்டது. இதனால் சவுதியில் எந்த விதமான சேதங்களும் ஏற்படவில்லை. மக்கள் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.சவுதி மீது கடந்த மே மாதத்தில் இருந்து அடிக்கடி ஏவுகணை தாக்குதல்களை ஹவுதி நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் பரவலானது தொற்று நோய்க்கான விகிதாசார எல்லையை அடைந்தது

பதவி விலகினார் ஈராக் பிரதமர்

டிக் டாக் செயலியை வாங்க டுவிட்டர் நிறுவனம் களத்தில்