(UTV | வாஷிங்டன்) – அலிபாபா போன்ற சீனாவுக்கு சொந்தமான சில நிறுவனங்களை அமெரிக்கா அரசாங்கம் கட்டுப்படுத்தப் போகிறதா தெரிவிக்கப்படுகின்றது.
டிக் டொக் (Tik Tok)இனது தடைக்குப் பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது புதிய அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெய்ஜிங் இனது இதய துடிப்பை அதிகரித்துள்ளார். அலிபாபா போன்ற சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க முடியும் என டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தார்.
தனது வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பில், அலிபாபா போன்ற சீனத்திற்கு சொந்தமான சில நிறுவனங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தப் போகிறதா என்று கேட்கப்பட்டபோது.
‘சரி! நாங்கள் இன்னும் சில சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம், ஆம் அது நடக்கலாம் என்றார்’. அமெரிக்காவில் குறுகிய வீடியோ பயன்பாடான டிக் டொக் தடை செய்ய உத்தரவு பிறப்பித்த பின்னர், தொழில்நுட்ப துறையில் சீன நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் ஏற்கனவே ஒரு முன்னணியைத் திறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.