உலகம்

நியூஸிலாந்தில் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு

(UTV|நியூஸிலாந்து)- நியூஸிலாந்தில் பொதுத்தேர்தல் பிற்போடப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜசிந்த ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

நியூஸிலாந்தில் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், ஒக்டோபர் 17 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

102 நாட்களின் பின்னர் கொரொனா வைரஸ் தொற்றுடன் ஒரே குடும்பத்தைச் செர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து ​இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியும் தேர்தலைப் பிற்போடுமாறு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 900 ஆக அதிகரிப்பு

இத்தாலியில் 24 மணித்தியாலத்தில் 969 மரணங்கள்

இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் – ஈரானின் ஆன்மீக தலைவர்.