உள்நாடுசூடான செய்திகள் 1

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியீடு

(UTV|கொழும்பு)- தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் நாட்களில் குறித்த அமைச்சினால் அனுப்பி வைக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நியமனம் பெறுபவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்று ஓரிரு வாரங்களில் 50,000 பட்டதாரிகளுக்கும் குறைந்த வருமானம் கொண்ட ஒரு இலட்சம் பேருக்கும் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தார்.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் https://www.facebook.com/pubadsrilanka/ இணையதளத்தில் பார்வையிட முடியும்

Related posts

இன்று சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது

கலஹா சம்பவம்-பிரதேசவாசிகள் மீது கண்ணீர்புகை தாக்குதல்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திர கட்சி கதிரை சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – லசந்த அழகியவண்ண

editor