உலகம்

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பதிப்பு

(UTV|கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 21,618,290 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 769,009 ஆக அதிகரித்துள்ளதுடன், 14,334,332 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை உலகிலேயே கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

உலகிலேயே கொரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் பலியானவா்களின் எண்ணிக்கை 172,606 ஆக உள்ளது.

அந்த நாட்டில் 5,529,789 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

கனடா – பிரிட்டன் வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம்!

சொகுசுக் கப்பலில் புதிதாக 60 பேருக்கு கொரோனா

சர்ச்சையில் பரிஸ் டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகம்