உள்நாடு

ஒன்லைன் முறைமை : கால அவகாசம் இன்றுடன் நிறைவு

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலில் இம்முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தமது தகவல்களை வழங்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், இதுவரை தகவல்களை வழங்காத பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினத்தினுள்(15) விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்தி தகவல்களை வழங்குமாறும் செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 175 உறுப்பினர்கள் இதுவரை அவர்களின் தகவல்களை ஒன்லைன் முறைமையூடாக (Online Registration System)பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப் படிவம் மூலம் உறுப்பினர்களின் தகவல்களை பெறுவது வெற்றிகரமாக அமைந்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைமை

இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

மின்னழுத்தியால் மகனுக்கு  சூடு வைத்த தாய் கைது