(UTV | கொழும்பு) – புதிய அரசின் கொள்கைப் பிரகடனத்தை எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20ம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் தேர்வு உட்பட ஆரம்பகட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், பாராளுமன்றம் பிற்பகல் 3.00 மணிவரை சபாநாயகரால் ஒத்திவைக்கப்படும்.
இதன்பிரகாரம் பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும். இதன்போதே ஜனாதிபதியால் புதிய அரசின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.