(UTV | பூட்டான்) – பூட்டானில் முதல் முறையாக முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, பூட்டானில் கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் குவைத்தில் இருந்த பூட்டான் திரும்பிய 27 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பூட்டனில் நாடு முழுவதும் முதல் முறையாக முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 21 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில், பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டு மக்கள் அனைவரையும் வீடுகளில் இருக்குமாறு பூட்டான் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் பூட்டான் அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.