உள்நாடு

எனது அபிவிருத்தி பணிகளை தடை இன்றி முன்னெடுப்பேன்

(UTV|கொழும்பு)- எனக்கு கிடைத்திருக்கின்ற அமைச்சின் மூலம் எம் மீது நம்பிக்கை வைத்த தோட்ட மக்களுக்கும் அனைத்தின மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தினை உருவாக்குவேன். என இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் இன்று(14) கடமையேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தோட்ட மக்களுக்கு ஏனைய மக்களுக்கு வேலை செய்யக்கூடிய நல்ல அமைச்சு ஒன்று இன்று எனக்கு கிடைத்திருக்கிறது.

இந்த வேளையில் என் மீது நம்பிக்கை வைத்து எனது தந்தையின் அமைச்சினை எனக்கு வழங்கியதற்காக ஜனாதிக்கும் பிரமருக்கும் நன்றி கூற வேண்டும்.

ஆகவே இந்த அமைச்சின் மூலமாக மலையக மக்களுக்கு ஏனைய மக்களுக்கும் சிறந்த ஒரு சேவையினை முன்னெடுப்பேன் எனவும் இந்த நேரத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் கடமை பட்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்..

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு பிரதமரின் நேரடி பார்வையின் கீழ் காணப்படுவதனால் எனது அபிவிருத்தி பணிகளை தடை இன்றி தயக்கம் இன்றி முன்னெடுப்பேன். யாரும் அச்சப்பட தேவையில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்

Related posts

விகாரையின் நிர்மான பணிகள் – கிழக்கு ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தம்!

தூசிதுகள்கள் மாசுப்படும் அளவு அதிகரிக்கக் கூடும்

தேங்கி நிற்கும் கழிவு நீர்- சுகாதார சீர்கேட்டினால் மக்கள் அவதி.