கேளிக்கை

மேலும் ஒரு பிரபல நடிகைக்கு கொரோனா

(UTV|இந்தியா)- கொலிவூட் பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை நிக்கி கல்ராணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’கடந்த வாரம் மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. நான் இப்போது குணமடைந்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் உலக அழகி போட்டிகள்…

மீடூ-வில் சிக்கிய நடிகர் அமிதாப்பச்சன்…

ஏ.ஆர்.ரகுமான் இடத்தை பிடிக்கும் அனிருத்?