உள்நாடுசூடான செய்திகள் 1

180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை : அமைச்சர்  மனுஷ

(UTV | கொழும்பு) –

புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் மேலதிக வேலைநேரம் மற்றும் அதற்கான கொடுப்பனவு தொடர்பிலும் சீராக்கல்  செய்யும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில் சங்கங்கள் மற்றும் தொழில் வழங்குநர்கள்  உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்து தயாரிக்கப்பட்ட இந்த மாதிரி 2023 தொழிலாளர் சட்டச் சீர்த்திருத்த திருத்த சட்ட மூல நகலை தேசிய தொழில் ஆலோசனை சபையிடம் கையளித்த பின்னர் இடம்பெற் ஊடகவியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள மாதிரி 2023 தொழிலாளர் சட்டச் சீர்த்திருத்தங்கள் (தொழில் சட்ட மறுசீரமைப்பு) தொடர்பில் தொழில் சங்கங்கள் மற்றும் தொழில் வழங்குநர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதுதொடர்பிலான கருத்துக்களை முன்வைப்பதற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருத்தத்திற்கு எதிராக நீதி மன்றம் செல்லவும்  சந்தர்ப்பம் உண்டு

தற்போது அமுலில் உள்ள தொழில் சட்டம் 100 ஆண்டுகள் பழைமையானது. இவை நவீன தொழில்துறை உலகிற்கு ஏற்றதாக  இல்லை.

தற்போதைய தொழில் துறைகளுக்கு ஏற்ற சட்டங்களாக இல்லை. இவற்றினால் தொழிலாளர்களுக்கு நம்மை இல்லை. மறுபுறத்தில் தொழில் வழங்குனர்களுக்கும் பயன் இல்லை. இதனால் நாட்டின் பொருளாதார வளர்சிக்கும் தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இவற்றில் இடமில்லை.  தொழில் சட்ட மறுசீரமைப்பை தயாரிப்பதற்காக தொழில் சங்கங்கள் மற்றும் தொழில் வழங்குநர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களின் கருத்துக்களை கண்டறிவதற்காக தொடர் செயலமர்வுகள் நடத்தப்பட்டன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்தும் தொழில் சட்ட மறுசீரமைப்பை வலியுறுத்தியிருந்தன.   பெண்கள் அவர்களின் திறமையை வெளிபடுத்துவதற்கு வசதியான திருத்தங்கள் இதில் உள்ளவாங்கப்பட்டுள்ளன. விசேடமாக வீட்டில் இருந்தவாறே பெண்கள் உள்ளிட்டோர் பணியாற்வதற்கு சட்டத்தில் திருத்தம்  மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொழிலாளர்களுக்கு முதலாளிமார்களுக்கு இடையில் முரண்பாடுகளுக்கு இடமின்றி இரு தரப்பினரும் நன்மையடையக் கூடியவகையில் 34 விடயங்களை உள்ளடக்கிய தொழில் சட்ட மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது . அத்துடன் புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் மேலதிக வேலை நேரம் மற்றும் அதற்கான கொடுப்பனவு தொடர்பிலும் சீராக்கல்  செய்யும் வகையில் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சவேந்திர டி சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

நுவரெலிய நகர் மட்டத்தில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்சக்கட்ட நடவடிக்கை

நேபாளத்திலிருந்து இலங்கை வந்த 93 மாணவர்கள்