சூடான செய்திகள் 1

18 வயதான யுவதி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த 3 பேரை கைது செய்ய விசாரணை ஆரம்பம்…

(UTV|COLOMBO)-19 வருடங்களுக்கு முன்னர் கொரியாவில் 18 வயதான யுவதி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில், 3 இலங்கையர்களை கைது செய்ய, குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கொரியாவின் தேகு என்ற பிரதேசத்தில் 18 வயதான யுவதி, வாகன விபத்தொன்றில் பலியானமை தொடர்பான தகவல் 1998ம் ஆண்டு பதிவானது.
இதனை அடுத்து அந்தநாட்டின் காவற்துறையினர் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த யுவதியின் உள்ளாடைகள் வேறொரு இடத்தில் இருந்து மீட்கப்பட்டதுடன், அதில் விந்தணுக்கள் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில் விசாரணை அதிகாரிகள் குறித்த விந்தணுக்களைக் கொண்டு, மரபணு பரிசோதனை நடத்தி, அதன் மாதிரிகளை சேமித்து வைத்திருந்தனர்.

பின்னர் 2010ம் ஆண்டு இலங்கையில் இருந்து கொரியாவிற்கு சென்ற இலங்கையர் ஒருவர், சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்ததாக குற்றம் சுமத்தி தொடரப்பட்ட வழக்கில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.
அவரிடம் இருந்து பெறப்பட்ட மரபணுக்கள், 2011ம் ஆண்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, 1998ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் யுவதியின் உள்ளடையில் இருந்து பெறப்பட்ட விந்தணுக்களின் மரபணுக்களுடன் ஒத்திருந்தமை தெரியவந்தது.

இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதியின் தந்தையால் வழக்கு தொடர முயற்சித்த போதும், பாலியல் துஸ்பிரயோக சம்பவம் இடம்பெற்று 10 வருடங்களுக்குள் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அந்த நாட்டின் விதிமுறைக்கு அமைய, நீதிமன்றம் வழக்கினை நிராகரித்தது.

இந்த குற்றத்துடன் மேலும் இரண்டு இலங்கையர்களும் தொடர்பு கொண்டமை தெரியவந்ததுடன் அவர்கள் இருவரும் இந்த காலப்பகுதியில் நாடுதிரும்பி இருந்தனர்.
இந்தநிலையில் குறித்த யுவதியின் தந்தை மேற்கொண்ட முயற்சிகளுக்கு அமைய கடந்த ஆண்டு ஒகஸ்ட் 28ம் திகதி இந்தவிடயம் தொடர்பில் தென்கொரிய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது.
இதனை அடுத்து இந்த வருடம் மே மாதம் 30ம் திகதி கொரிய தூதுக்குழு ஒன்று இதுதொடர்பில் கலந்துரையாடல் நடத்துவதற்காக இலங்கை வந்தது.
அந்த குழு சட்ட மா அதிபர், நீதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளையும் சந்தித்து, கலந்துரையாடல் நடத்தியுள்ளது.
இதனை அடுத்து சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சிலர் கொரியாவிற்கு சென்று அங்குள்ள இலங்கைத் தூதரகத்தில், சம்பவம் தொடர்பான பதிவுகளை மேற்கொண்டிருந்ததுடன், சம்பவ இடத்தையும் பார்வையிட்டது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

கோட்டபாய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலை

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

O/L பரீட்சை பெறுபேறுகள் 28 ஆம் திகதி