(UTV | கொழும்பு) – மேலும் 29 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,622 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, 238 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.