உலகம்

லெபனான் அரசாங்கம் இராஜினாமா

(UTV|லெபனான் ) – கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுக கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால், அந்த நாட்டில் பிரதமர் ஹஸ்ஸன் டியாப் தலைமையிலான அரசாங்கம் இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பிரதமர் ஹஸ்ஸன் டியாப் தலைமையில் அமைச்சரவை நேற்று கூடி விவாதித்தது.

பெய்ரூட் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, நாடு தழுவிய அளவில் நடக்கும் போராட்டங்கள் குறித்தும், 200 பேருக்கும் அதிகமானோர் பலியான சம்பவத்தில் மக்களின் எதிர்ப்புணர்வுக்கு பதில் அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து தமது அரசின் பதவி விலகல் அறிவிப்பை, நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் ஹஸ்ஸன் டியாப் வெளியிட்டார்.

Related posts

அமெரிக்காவில் ஊரடங்கு சட்டத்தை படிப்படியாக நீக்க தீர்மானம்

கொரோனாவின் வீரியம் – ஸ்பெயின் மீண்டும் முடக்கம்

கொரோனா உயிரிழப்புகள் இரட்டிப்பாகும் – WHO எச்சரிக்கை