உள்நாடு

எமது கொள்கைளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்ற தயார்

(UTV|கொழும்பு) – தமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் காலங்களில் அக்கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த தோல்வியை கண்டு தாம் மகிழ்ச்சியடையப்போவதில்லை என்றும் இப்போது ஒன்றுபடுவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதாக தெரிவித்துள்ளார்.

எனவே எங்களுடன் பணியாற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.

ஆனால் அவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களை பதவிகளுக்கு நியமிக்க விரும்பினால், ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டால், அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு

தே.அ.அட்டை விநியோகம் தொடர்பில் குறுந்தகவல் சேவை

ஐ.தே.க செயற்குழு உறுப்பினர்கள் சிலர் பங்கேற்கவில்லை