உள்நாடு

ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன்

(UTV | இந்தியா) – இந்திய அணி மற்றும் ஆர்.சி.பி ஆகிய அணிகளின் தலைவர் விராட் கோஹ்லி சமீபத்தில் பகிர்ந்த ட்விட்டர் பதிவு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்கு தலைவராக இருந்து பல சாதனைகளை படைத்து வரும் விராட் கோஹ்லிக்கு ஐபிஎல் தொடரில் கிண்ணத்தினை வெல்ல முடியவில்லை என்பது மிகப்பெரிய குறையாக இருந்து வருகிறது. பல முறை இறுதிப்போட்டி வரை வந்தும் அந்த அணியால் கிண்ணத்தினை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு அமீரகத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரை ஆர் சி பி மற்றும் கோஹ்லி ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இதையடுத்து நேற்று கோஹ்லி தன் டிவிட்டர் பக்கத்தில் ‘எல்லாவற்றையும் விட விசுவாசம் மிகவும் முக்கியம். ஐபிஎல் தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளேன்’ என்று பகிர்ந்திருந்தார்.

இதில் விசுவாசம் மிகவும் முக்கியம் எனக் கூறியது ஏன் என பலரும் குழம்பியுள்ளனர்.

Related posts

பாராளுமன்ற தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் புதிய கூட்டணி ?

editor

கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேறியது நான்காவது குழு

மேலதிக உதவிகளைப் பெற IMF மற்றும் உலக வங்கியுடன் பேச்சு