கிசு கிசு

” அண்ணன்” பாசம் கண்ணை கட்டுது

(UTV | கொழும்பு) – இடம்பெற்று முடிந்துள்ள பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஸ்ரீ பொதுஜன முன்னணியின் வெற்றியின் பிற்பாடு, நேற்றைய தினம் புதிய அரசின் பிரதமராக மஹிந்த ராஜக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தார்.

இது தொடர்பில் மனோ கணேஷன் அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

எனக்கு இப்படி ஒரு தம்பி இல்லையே என ஏக்கமாக இருக்கிறது..!

பிறப்பால் “அண்ணா” என கூட வந்தவர்களும் சரி, இடையில் “அண்ணா” என கூட வந்தவர்களும் சரி, என்னை பயன்படுத்தி அரங்குக்கு வந்து விட்டு என் முதுகில் அல்லவா குத்துகிறார்கள்..?

“ராஜபக்ச சகோதரர் மத்தியில் முரண்பாடு. சும்மா படம் காட்டுகிறார்கள்” என்று எவரும் சொல்லலாம். ஆனால் இவ்வளவு நாள் படம் ஓட்ட முடியாது. இந்த பாசம்தான் இவர்களது வெற்றிக்கு அடிப்படை

எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

விமலின் முதல் கண்டுபிடிப்புக்கே ஆப்பு

சங்காவின் மனைவியை தவறாக பேசிய இந்திய வீரர்

தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் கொத்தணி உருவாகும் சாத்தியமா