(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, பாராளுமன்ற ஆசனத்தில் அமர்வதற்கு முன்பாக குறித்த விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பலர் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான இறுதித் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.