உள்நாடு

அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

(UTV |கொழும்பு) – அனைத்து அரச பாடசாலைகளிலும் நாளை ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 200 இற்கு மேற்பட்ட மாணவர்களை கொண்ட 2ம் நிலை பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்கள் வாரத்தில் ஒருநாள் மட்டுமே பாடசாலைக்கு அழைக்கப்படுவர்.

தரம் 5 மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்களிலும் பாடசாலை நடத்தப்படும். எனினும் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் நேரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது சுகாதார வழிகாட்டுதல்களை அவசியமாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வியமைச்சு அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் 11ம், 12ம் மற்றும் 13ம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கடந்த 27ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. பொதுத்தேர்தல் முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் ஒருவார காலம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்

PHI பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

வரலாற்றில் முதன் முறையாக..