(UTV|கொழும்பு) – பொதுத்தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து நிலையங்களையும் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பாடசாலைகள், அரச நிறுவனங்கள் உட்பட வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு முன்னெடுக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மற்றும் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் இவ்வாறு தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் தலைமையில் முப்படையினரின் ஒத்துழைப்புடன் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்பாக அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்ட முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.