உள்நாடு

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

(UTV|கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காற்று நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் மழையுடனான வானிலையும் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts

தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நரகலோகம் – சஜித் கண்டனம்.

“சுடச் சொன்னது யார் என்று இன்னும் சொல்லவில்லை”