உலகம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாரிய தீ

(UTV | ஐக்கிய அரபு இராச்சியம்) – ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மான் நகரின் புதிய தொழில்துறை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி நேற்று(05) மாலை 6.30 மணியளவில் இவ் தீ பரவல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஹெலிகெப்டர் மற்றும் பாரிய தீயணைப்பு கருவிகள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை எந்தவித உயிர் சேதங்கள் தொடர்பான தகவல்களும் பதிவாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும் தீபரவலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

இதே வேளை, நேற்று முன்தினம் (04) லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று பாதிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகின் 2வது மிகப்பெரிய இந்து கோவில் அமெரிக்காவில்!

மியன்மாரில் தொடரும் பலிகள்

12 இலட்சத்தை தாண்டிய கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை