உள்நாடு

தபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர்

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் நடவடிக்கை நாளை காலை 7.00 மணிக்கும் 8.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது.

தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இறுதி தேர்தல் பெறுபேறுகள் நாளை நள்ளிரவிற்கு முன்னர் வழங்கக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

விருப்பு வாக்கு பெறுபேறுகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் முழுமையாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த ஜீவன் கடும் எதிர்ப்பு !

ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை விசேட உரை

editor