உள்நாடு

மேலும் 03 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 03 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,823 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 295 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனநாயகத்திற்கு மரண அடி – மஹிந்த தேசப்பிரிய.

பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

ஹம்பாந்தோட்டை – கொழும்பு அதிவேக வீதியின் போக்குவரத்து சேவை இன்று முதல்