(UTV | கொழும்பு) – நாட்டில் புதிதாக 08 கொரோனா தொற்றாளர்கள் நேற்று(02) இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,823 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் ஒருவர் லங்காபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதியொருவருக்கு நெருக்கமானவர் எனவும் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய 07 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 2514 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது, 298 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது