(UTV|இந்தியா) – முன்னணி இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல வருடங்கள் கழித்து குஷ்பூ, மீனா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
மேலும் முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் காமெடியன் கதாபாத்திரங்களில் சதிஷ் மற்றும் சூரி நடித்து வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு தான் இப்படத்தின் டைட்டில் லுக் தீம் பாடலுடன் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சமீபத்தில் இப்படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழகிவிட்டதாகவும், இப்படத்திற்காக அவர் வாங்கி அட்வான்ஸ் தொகையை திருப்ப கொடுத்து விட்டதாகவும் செய்திகள் பரவின.
ஆனால் இது முற்றிலும் வதந்தி மட்டுமே, இது உண்மையல்ல என்று தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அண்ணாத்த படம் குறித்த கதை ஒன்று கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. ஆம் இப்படத்தின் கதை : ரஜினிக்கு குஷ்பு, மீனா என இரண்டு முறைப்பெண்கள் என்றும், இருவரும் ரஜினியை திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஒருவரை திருமணம் செய்தால் இன்னொருவர் மனம் நோகும் என்பதால் இருவரையும் திருமணம் செய்யாமல் வேறொரு பெண்ணை ரஜினி திருமணம் செய்வதாகவும், அந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் கீர்த்தி சுரேஷ் என்பதுதான் முதல் பாதி கதையாம்.
மேலும் இரண்டாம் பாதியில் குஷ்பு, மீனா இருவரும் கீர்த்தி சுரேஷை மருமகளாக்க போட்டி போடுவதாகவும் இந்த போட்டியில் யார் வென்றார்கள் என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் என்றும் கூறப்படுகிறது.