(UTV | இத்தாலி ) – இத்தாலியில் அமுலில் இருக்கும் அவசரகால நிலைமையினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
கொவிட்-19 (கொரோனா) வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே (Giuseppe Conte) தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 2 இலட்சத்து 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 35,129 உயிரிழப்புகள் இதுவரை பதிவாகியுள்ளன.
இந்நிலையில் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளிலும் பார்க்க பரவும் வேகம் அதிகளவில் காணப்படுவதாகவும், இதன் காரணமாக தேசிய அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் பயணக் கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்