உள்நாடு

PHI அதிகாரிகள் இன்று முதல் கடமைக்கு

(UTV|கொழும்பு)- இன்று(29) காலை 7.30 மணி முதல் வழமை போன்று கடமைக்கு சமூகமளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் கடந்த 16 ஆம் திகதி முதல் பொது சுகாதார பரிசோதகர்களால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நோய்த்தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளை சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் தங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என அறிவித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தால் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருடன் நேற்று(28) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கை போராட்டத்தை கைவிட தீர்மானித்தனர்.

பொது சுகாதார பரிசோதகர்களுக்குரிய அதிகாரங்களுக்கமைய வழக்கொன்றை தொடரும் போது சுகாதார அதிகாரியுடன் ஆலோசிக்க பொது சுகாதார பரிசோதகர்கள் இதன்போது இணங்கியுள்ளதாக இந்த சந்திப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஸஹ்ரானுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது

நாடு முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் இராணுவத்தை களங்கப்படுத்த வேண்டாம்

இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட வாகன உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது – தேசிய கணக்காய்வு அலுவலகம்

editor