உலகம்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா

(UTV|அமெரிக்கா) – அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஒ பிரையனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரையனுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாகவும், அறிகுறிகள் சிறிய அளவில் இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது. மேலும், அவர் தனது பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரையனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தபோது அதிபர் டிரம்பிற்கும் துணை அதிபர் மைக் பென்சுக்கும் வைரஸ் பரவியதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.

மேலும், வெள்ளைமாளிகையில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கும், அதிபர் மற்றும் துணை அதிபருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள அனைவருக்கும் தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
வெள்ளைமாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் இதுவரை 4,433,410 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 150,444 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தான் இன்னொரு இலங்கையாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை – இம்ரான்

நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்!