உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,805 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம்(27) கொரோனா தொற்றுடன் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 17 பேர் சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய ஐந்து பேர் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டிருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 2,121 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், மேலும் 673 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மதுபானங்களில் விலை அதிகரிப்பு!

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி அநுர

editor

ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு