உள்நாடு

ஹெரோயின் – போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

(UTV|கொழும்பு) – கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2400 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 5,600 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் அங்கொட மற்றும் வத்தளை பகுதிகளை சேர்ந்த 20 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மத்திய ஊழில் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரையும் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பயணிகள் விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்

அடுத்து ஆட்சி அமைக்கும் எந்தவொரு அரசாங்கத்திலும், அமைச்சராக இருப்போம்: மனோ

System Change மக்கள் விடுதலை முன்னணியிலயே நடந்துள்ளது – சஜித்

editor