(UTV | நல்லூர்) – வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று(25) காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழாவானது மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனே நடைபெறுமென ஆலய நிர்வாகத்தினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
மேலும் 25 நாட்கள் நடைபெறும் நல்லூரானின் திருவிழாவில், 10ம் நாளான ஓகஸ்ட் 3 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் ஓகஸ்ட் 12ம் திகதி சூர்யோற்சவமும் கார்த்திகை உற்சவமும் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து 13 ஆம் திகதி கைலாச வாகனமும், மறுநாள் வெள்ளிக்கிழமை வேல் விமானத் திருவிழாவும், 16 ஆம் திகதி சப்பைரதத் திருவிழாவும் 17 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 18 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.