உள்நாடு

புகையிரத பாதையை நவீனமயப்படுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு)- அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையிலான புகையிரத பாதையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையிலான புகையிரத பாதையை நவீனமயப்படுத்தப்படாததால், அந்த பகுதி மிகவும் பாழடைந்து காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனால் அநுராதபுரம் – வுவனியா புகையிரத பாதையை சில மாதங்களுக்கு மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புகையிரத பாதையை நவீனமயப்படுத்தத் தேவையான தண்டவாளங்கள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டையில் இருந்து கதிர்காமம் வரையான ரயில் மார்க்கத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

கடன் ஒப்பந்தத்தின் கீழ் நாளைய தினம் டீசல் நாட்டுக்கு

ஜீவன் தொண்டமானை பரிந்துரைக்கும் ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து