வணிகம்

ETI, சுவர்ணமஹால் நிறுவன வைப்பாளர்களுக்கு நட்டஈடு

(UTV|கொழும்பு)- ETI மற்றும் சுவர்ணமஹால் பைனான்சியல் சர்விசஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை நாளை(25) மற்றும் நாளை மறுதினம்(26) இடம்பெறுமென மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை மூலம் ETI பைனான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பைனான்சியல் சர்விசஸ் ஆகிய வியாபார நிறுவனங்கள் கடந்த 13 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.

அவற்றில் வைப்பிட்டவர்கள் இழப்பீடுகளைப் பெற விண்ணப்பிக்கும் போது, சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை என்பனவற்றின் பிரதிகளை மக்கள் வங்கியிடம் முறையாகக் கையளிப்பதன் மூலம் இழப்பீட்டை முறையாகப் பெற முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

பழவகைகளில் விஷ இரசாயன பொருட்கள் அடங்கியுள்ளதா? – சுகாதார அமைச்சு நடவடிக்கை

யாழ். தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

பருப்பு – டின் மீன் ஆகியவற்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்