(UTV|இங்கிலாந்து)- இங்கிலாந்தில் இன்று(24) முதல் வெளியே செல்லும் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்ற நிலையில், புதிய விதிகளின்படி வெளியிடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் முக கவசங்களை அணிவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.
வங்கிகள், தபால் அலுவலகங்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்லும்போது முக கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போரில் புதிய விதிகளை ஒவ்வொருவரும் பின்பற்றி பெரும் பங்காற்ற வேண்டும் என அந்நாட்டு சுகாதார செயலாளர் கூறியுள்ளார்.
மேலும் இன்று முதல் முக கவசங்களை அணியாதவர்களுக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் எனவும், இதில், 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மற்றும் குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.